ரேஷன் அரிசி கடத்திய சிறுவன் உள்பட 3 பேர் கைது
கந்திலி அருகே ரேஷன் அரிசி கடத்திய சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், உத்தரவின் பேரில் நேற்று கந்திலி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட குனிச்சி மோட்டூர் பகுதியில் போலீசார் மற்றும் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 800 கிலோ ரேஷன் அரிசியை, காருடன் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்தி வந்ததாக ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த ராமு (வயது 25), கார்த்தி (27) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் கடத்தலுக்கு உடனடியாக இந்த சிறுவன் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி, கார் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.