நகை பறிப்பு, திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது

நகை பறிப்பு, திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-11 19:25 GMT

காட்டுப்புத்தூர், ஜூலை.12-

காட்டுப்புத்தூர் அருகே உள்ள எம்.புத்தூர் ஊராட்சி தொட்டியப்பட்டி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மனைவி தனலட்சுமி (42). கூலி தொழிலாளியான இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று மர்ம ஆசாமிகள் அங்கிருந்த 6½ பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது தொட்டியபட்டி நாயக்கர் தெருவை சேர்ந்த மோகன் (30) மற்றும் 15 வயது சிறுவன் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து நகை-பணத்தை மீட்டனர். இதேபோல் கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவில் பழனியப்பா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் நளினி வசந்தா (வயது 73). சம்பவத்தன்று இவர் பழுதான மிக்சியை பழுதுநீக்குவதற்காக பக்கத்து ஊருக்கு எடுத்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த திருச்சி கே.கே.நகர் குட்டி அம்பலக்கார தெருவை சேர்ந்த அன்பரசன் (34) தான் அழைத்து செல்வதாக கூறி நளினி வசந்தாவை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றார். பின்னர். நொச்சியத்தை தாண்டி ஒரு இடத்தில் நளினி வசந்தாவை இறக்கி விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்