சிறுவன் உள்பட 3 பேர் கைது

திருட்டு வழக்கில், சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-10 15:18 GMT

நிலக்கோட்டை அருகே உள்ள ஜெயநாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் திருக்குமரன் (வயது 34). நேற்று இவர், தனது மோட்டார் சைக்கிளை நிலக்கோட்டை பூ மார்க்கெட் முன்பு நிறுத்தியிருந்தார். அந்த மோட்டார் சைக்கிளின் பூட்டை உடைத்து, நிலக்கோட்டை பகுதியை சோ்ந்த 17 வயது சிறுவன் திருட முயன்றான். இதனைக்கண்ட திருக்குமரன், அந்த சிறுவனை கையும் களவுமாக பிடித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுத்தையா வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தார்.

இதேபோல் நிலக்கோட்டை அருகே உள்ள குண்டலபட்டி காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துவேல் (24) என்பவரின் வீட்டுக்குள், நேற்று முன்தினம் 2 பேர் புகுந்து வெள்ளிக்கொலுசு மற்றும் செல்போனை திருடினர். இதனையடுத்து அவர்களை பிடிக்க முயன்றபோது 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் முத்துவேல் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நிலக்கோட்டையை சேர்ந்த கிஷோர் குமார் (29), அணைப்பட்டியை சேர்ந்த சத்தியமூர்த்தி (24) ஆகியோர் முத்துவேல் வீட்டுக்குள் புகுந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்