கமுதியை சேர்ந்த குழந்தை உள்பட 3 பேர் பலி
அருப்புக்கோட்டை அருேக சரக்கு வாகனம் மீது காா் மோதிய விபத்தில் கமுதியை சேர்ந்த குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர். இதில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருேக சரக்கு வாகனம் மீது காா் மோதிய விபத்தில் கமுதியை சேர்ந்த குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர். இதில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார் மோதியது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கழுவன்பொட்டலையை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் மற்றும் உறவினர்கள் 16 பேர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சரக்கு வாகனத்தில் சென்றனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அருப்புக்கோட்டையை அடுத்த பந்தல்குடி அருகே வேலாயுதபுரம் விலக்கில் வந்தபோது அந்த வழியாக வந்த கார், சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் சரக்கு வாகனமும், காரும் பள்ளத்தில் கவிழ்ந்தது.
3 பேர் பலி
இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணித்த பெருநாழியை சேர்ந்த முத்தையா மனைவி பெருமாள் அக்காள்(வயது 50) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 15 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி புவித்ரா (12), நதிமாறன் (3) ஆகிேயார் உயிரிழந்தனர். காயம் அடைந்த ரவிக்குமார் உள்பட 13 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினா்.
இந்த விபத்து குறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.