கஞ்சா பொட்டலங்களுடன் 3 பேர் கைது

கஞ்சா பொட்டலங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-10 20:03 GMT

சிவகாசி, 

சிவகாசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா மற்றும் புகையிலை விற்பனை அதிகரித்து வந்தது. இந்தநிலையில் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புகையிலை விற்பனை குறித்து டவுன் போலீசார் நகரின் பல்வேறு பகுதியில் ரகசிய விசாரணை நடத்தினர். இதில் திருத்தங்கல் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரூபன்சக்கரவர்த்தி (வயது 28) என்பவர் கஞ்சாவைத்த பீடியை விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை ரகசியமாக கண்காணித்தனர். இதில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தாழையூத்துப்பட்டி கார்த்திக் (28), அய்யம்பட்டியை சேர்ந்த பவுன்தாய் (56) ஆகியோர் உதவியுடன் கஞ்சா பீடி தயாரித்து மாணவர்கள், கூலி தொழிலாளிகளுக்கு வினியோகம் செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து ரூபன்சக்கரவர்த்தி, கார்த்திக், பவுன்தாய் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 160 கிராம் எடை உள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்