குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது
குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது
விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் கடந்த 20.6.2023-ல் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அஜித் என்ற அஜித்குமார்(வயது 26), விஜய் என்ற செல்வம்(19), தனுஷ்(19) ஆகிய 3 பேரும் விருதுநகர் பாண்டியன் நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதனால் இவர்களது குற்றச்செயல்களை தொடர்ந்து கட்டுப்படுத்தும் வகையில் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் பரிந்துரை செய்தார். அதன்பேரில் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார் அதன் பேரில் 3 பேரையும் பாண்டியன் நகர் போலீசார் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.