மேலூர் அருகே முன்னாள் அரசு ஊழியர் கொலை வழக்கில் 3 பேர் கைது

மேலூர் அருகே முன்னாள் அரசு ஊழியர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-05-20 20:38 GMT

மேலூர்

மேலூர் அருகே முன்னாள் அரசு ஊழியர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அரசு ஊழியர் கொலை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு போலீஸ் சரகத்தில் உள்ளது தர்மசானபட்டி. இங்கு புதுப்பட்டி விலக்கு அருகே வாடகை வீடு ஒன்றில் ராமன் (வயது63) என்பவர் தனியாக வசித்து வந்தார். இவர் கால்நடை மருத்துவ துறை மருந்தாளுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பட்டாகத்தியுடன் வந்த 3 பேர் ராமனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கீழவளவு போலீசார் விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

போலீசார் நடத்திய விசாரணையில், பெண் ஒருவருடன் ராமன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த முன்விரோதம் காரணமாக ராமன் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக புதுப்பட்டியை சேர்ந்த பாட்சா என்ற கிருஷ்ணன் (50) மற்றும் அதே ஊரை சேர்ந்த சுப்பையா (49), அழகிச்சிபட்டியை சேர்ந்த கண்ணன் (41) ஆகிய மூன்று பேரைகைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்