வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-27 17:55 GMT

சிவகங்கை மாவட்டம், ஆணையடி பகுதியை சேர்ந்தவர் பிரவீன் ராஜா (வயது 26). இவர் குளித்தலை சுங்ககேட் பகுதியில் தின்பண்டங்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். இவரது உறவினர்களான அன்புகுமார், மணி ஆகியோர் அவருக்கு உதவியாக அந்த கடையில் வேலை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அங்கு வந்த குளித்தலை தெற்கு மணத்தட்டை பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் (27), பாலாஜி (28), கோட்டமேடு பகுதியை சேர்ந்த குமரவேல் (25) ஆகிய 3 பேரும் அந்தக் கடையில் இருந்த தின்பண்டங்களை தாங்களாகவே எடுத்து சாப்பிட்டுள்ளனர். மேலும் சாப்பிட்ட பொருட்களுக்கு பணத்தை கொடுக்க மறுத்து மதுப்பாட்டிலை காட்டி பிரவீன் ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பிரவீன் ராஜா கொடுத்த புகாரின் பேரில் புவனேஸ்வரன், குமரவேல், பாலாஜி ஆகிய 3 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்