மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 24). இவர் விருதுநகர் முத்தால்நகரில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு வந்திருந்தார். மாமனார் பன்றி தொழுவம் வைத்துள்ள நிலையில் பன்றி தொழுவத்தில் சத்தம் கேட்டதால் ராஜ்குமாரை சென்று பார்த்து வரும்படி கூறினார். ராஜ்குமார் பன்றி தொழுவத்திற்கு சென்ற போது ஒருவர் ஒரு பன்றியை கையில் வைத்துக் கொண்டும், மற்றொருவர் 2 நாய்களை பிடித்துக் கொண்டும் சென்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது சத்தியசாய் நகரை சேர்ந்த சதீஷ்குமார் தான் பன்றியை பிடித்து வர சொன்னதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் சிவகாசி முத்துராமலிங்கம் நகரை சேர்ந்த சித்திரைவேல் (37), வடமலாபுரத்தை சேர்ந்த கருப்பசாமி (24), விருதுநகர் சத்யசாய் நகரை சேர்ந்த சதீஷ்குமார் (34) ஆகிய 3 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.