மோட்டார்கள் திருடிய 3 பேர் கைது
மோட்டார்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடலூர்,
கூடலூர் அருகே நடுவட்டம் தனியார் எஸ்டேட்டுக்கு சொந்தமான பங்களாவின் ஜன்னல், கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த எஸ்டேட் தொழிலாளிகள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 2 மின் மோட்டார்கள், மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து நடுவட்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மோட்டார்கள் திருடிய நடுவட்டத்தை சேர்ந்த முகுந்தன் (வயது 30), சுபாஷ் (25), சுரேஷ்குமார் (31) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து மின்மோட்டார்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.