இரும்பு பொருட்களை திருடிய 3 பேர் கைது
இரும்பு பொருட்களை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓலப்பாளையம் அருகே உள்ள அதியமான் கோட்டை லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (வயது 54). இவர் மசக்கவுண்டன் புதூர் பிரிவு சாலை அருகே இரும்பு கிரில் பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் கிரில் பட்டறை முன்பு முருகேசன் வைத்திருந்த 35 கிலோ எடை கொண்ட 2 இரும்பு பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து முருகேசன் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், இரும்பு முகம்புகளை திருடியது அண்ணாநகர் நகராட்சி காலனி பகுதியை சேர்ந்த பிரசாத் (22), காந்திநகர் 7-வது தெருவை சேர்ந்த ரகுமான் (22), அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்த சுகந்தன் (21) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரும் போலீசார் கைது செய்து, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 இரும்பு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.