கிணற்றில் இரும்பு குழாய் திருடிய 3 பேர் கைது

சந்தவாசல் அருகே கிணற்றில் இரும்பு குழாய் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-09 10:45 GMT

கண்ணமங்கலம்

சந்தவாசல் அருகே உள்ள துரிஞ்சிக்குப்பம் பெரிய ஏரி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 47). இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று சத்தம் கேட்டது.

உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் சென்று பார்த்தனர்.

அப்போது கிணற்றில் இருந்த மின்மோட்டாருக்கு செல்லும் இரும்பு பைப்பை (குழாய்) ஆக்சா பிளேடு மூலம் அறுத்து 3 பேர் திருடிக் ்கொண்டாடிருந்னர்.

இதுகுறித்து உடனடியாக சந்தவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து இரும்பு குழாயை திருடியா அன்பழகன் (38), சசிதரன் (20), சதீஷ் (30) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து இரும்பு குழாய்களை பறிமுதல் செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்