300 கிலோ இரும்பு பொருட்கள் திருடிய 3 பேர் கைது

கடலூரில் 300 கிலோ இரும்பு பொருட்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-14 18:45 GMT

கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கடலூர் இம்பீரியல் சாலையில் வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது புதுச்சத்திரத்தில் இருந்து மரக்காணம் நோக்கி சென்ற சரக்கு வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தனர்.

அப்போது அதில், 300 கிலோ இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. இது பற்றி அந்த வாகனத்தில் வந்த 3 பேரிடம் போலீசார் விசாரித்தனர்.

3 பேர் கைது

விசாரணையில், அவர்கள் மரக்காணம் நடுக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் சந்தோஷ் (வயது 32), ஆனந்த் மகன் வடிவேல் (31), ஏழுமலை மகன் ராஜா (31) ஆகிய 3 பேர் என்று தெரிந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் புதுச்சத்திரம் தனியார் நிறுவனத்தில் இருந்து 300 கிலோ இரும்பு பொருட்களை திருடி வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரும்பு, சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்