மணல் கடத்தியதாக 3 பேர் கைது; மொபட்டுகள் பறிமுதல்

மணல் கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டு, மொபட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-09-08 21:04 GMT

காட்டுப்புத்தூர்:

காட்டுப்புத்தூரை அடுத்த நத்தம் காவிரி ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில் காட்டுப்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் போலீசாருடன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார். நத்தம் குறிஞ்சி நகர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது 2 மொபட்டுகளில் தலா 4 மணல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த கீழக்கரைகாட்டை சேர்ந்த சதீஷ்குமார்(வயது 38), நத்தம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(28) மற்றும் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த மோத்தீஸ்வரன்(19) ஆகிய 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கைது செய்து, மொபட்டுகளை பறிமுதல் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்