மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

நாகையில் மது பாட்டில் கடத்திய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2023-09-14 18:45 GMT

நாகையில் மது பாட்டில் கடத்திய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

மது கடத்தல்

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில், வெளிமாநில மதுபாட்டில், சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செல்லூர் சாலையில் சந்தேகத்துக்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை வழிமறித்து சோதனை செய்தனர்.

அதில் அவர் சட்டத்திற்கு புறம்பாக புதுச்சேரி மாநிலத்திலிருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்த நடத்திய விசாரணையில் அவர் வெளிப்பாளையம் மருந்து கொத்தள தெருவை சேர்ந்த இளையராஜா (வயது 40) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கடத்தி வந்த மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

அதேபோல் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் நாகூர் வெட்டாறு பாலத்தில் சந்தேகத்துக்கிடமளிக்கும் வகையில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் அவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ஜெயக்குமார் (32), தர்மராஜ் (36) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்