கேரளாவில் இருந்து தேனிக்கு மனித உடல் உறுப்புகளை காரில் கடத்தி வந்ததாக 3 பேர் கைது

உடல் உறுப்புகளை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என பூஜை செய்து எடுத்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2023-08-04 16:25 GMT

தேனி,

கேரளாவில் இருந்து தேனிக்கு மனித உடல் உறுப்புகளை காரில் கடத்தி வந்ததாக 3 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தமபாளையம் பகுதியில் சுற்றி திரிந்த காரை பிடித்து சோதனையிட்டதில் நாக்கு, கல்லீரல், இதயம் ஆகிய உறுப்புகள் காரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உடல் உறுப்புகளை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என பூஜை செய்து எடுத்து வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்