லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசாா் கைது செய்தனா்.
ஈரோடு ஈ.பி.பி.நகர் ஜனதா காலனியை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 58). நகைப்பட்டறை தொழிலாளி. இவருக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர், நான் உயிருடன் இருந்து என்ன பயன்? என்று புலம்பி வந்தார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் தெரிவித்து வந்தனர். கடந்த 24-ந் தேதி நாகேந்திரன் வீட்டில் வைத்து விஷத்தை குடித்தார். பிறகு அவர் வேலை செய்த நகைப்பட்டறைக்கு சென்று தூங்கினார்.
இந்தநிலையில் நாகேந்திரனை தேடி நகைப்பட்டறைக்கு சென்ற அவரது மகன் சந்திரபிரகாஷ், தனது தந்தை மயக்க நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு நாகேந்திரனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது நாகேந்திரன் விஷம் குடித்து இருந்தது தெரியவந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலையில் நாகேந்திரன் உயிரிழந்தார்.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.