கஞ்சா விற்ற 3 பேர் கைது
வள்ளியூரில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் பஜாரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சிறுமளஞ்சி வடக்கு தெருவை சேர்ந்த இசக்கிதாஸ் மகன் சிவா (வயது 26), சுடலையாண்டி மகன் வெங்கடேஷ் பெருமாள் (21), கணேசன் மகன் இசக்கி தாஸ் (21) ஆகியோர் என்பதும், விற்பனைக்காக 200 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.