கஞ்சா விற்ற 3 பேர் கைது

கடலூரில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-16 18:43 GMT

கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி தலைமையிலான போலீசார் புதுப்பாளையம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள டீக்கடை அருகில் வாலிபர் ஒருவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வன்னியர்பாளையத்தை சேர்ந்த ரோகன் (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதேபோல் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கஞ்சா விற்றதாக குப்பங்குளத்தை சேர்ந்த சஞ்சய் (20), சுப்புராயலு நகரை சேர்ந்த மூர்த்தி (19) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்