கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-10 18:28 GMT

கரூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கோவை ரோடு பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் பானுமதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்றதாக மோகன்ராஜ் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.இதேபோல் வெங்கமேடு சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டு காட்டுப்பகுதியில் கஞ்சா விற்றதாக பிரபு (31), தளபதி (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்