கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
வேலூரில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சார்பனாமேடு தண்ணீர் தொட்டி பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அங்கு சென்றனர்.
அப்போது அங்கு 3 பேர் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் திருப்பதி லட்சுமிபுரத்தை சேர்ந்த ஜெயமோகன் (வயது 28), ஆற்காடு புங்கனூர் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த காந்தி (26), அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவையும், அவர்களையும் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.