கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
தேவதானப்பட்டியில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவதானப்பட்டி பஸ் நிலையம் அருகே திருப்பூரை சேர்ந்த பாரதிராஜா (வயது 24), சுரேஷ் (23), பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியை சேர்ந்த சவுந்தரபாண்டி (44) ஆகியோர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் 2 கிலோ கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.