அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்த 3 பேர் கைது
அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே உள்ள தாயில்பட்டி, ராமலிங்காபுரம், அசேபா காலனி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிமுருகன், ராமமூர்த்தி, ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பட்டாசு திரி தயாரித்துக் கொண்டிருந்த அன்புக்கரசன் (வயது52), ராமமூர்த்தி (44), பாண்டி (50) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து தலா 50 குரோஸ் வெள்ளைத் திரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.