பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது
பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புன்னம் சத்திரம் அருகே உள்ள அதியமான் கோட்டை பகுதியில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வாய்க்கால் மேட்டில் சிலர் பணம் வைத்து சேவலின் காலில் கத்தியை கட்டி சண்டை நடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்டதாக கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (வயது 27), வேலாயுதம்பாளையம் மாரியப்ப பிள்ளை தெருவை சேர்ந்த ஆகாஷ் (19), காந்திநகர் பகுதியை சேர்ந்த மோகன் (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 2 சேவல்கள், ரூ.300 ரொக்கபணம் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பியோடிய அதியமான் கோட்டை பகுதியை சேர்ந்த மணிபாரதி (30), ஸ்டாலின் (43), கட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மலையப்பன் (26), அதியமான் கோட்டை பகுதியை சேர்ந்த கார்த்திக் (36) ஆகிய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.