விவசாயியை தாக்கிய 3 பேர் கைது

விவசாயியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-24 18:45 GMT

விழுப்புரம் அருகே உள்ள அய்யூர்அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 46), விவசாயி. இவர் தனது நிலத்தின் அருகில் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த அய்யங்கோவில்பட்டை சேர்ந்த ராஜேஸ்வரன் (25), ராஜி (26), கீழ்முத்தாம்பாளையத்தை சேர்ந்த லட்சுமிநாராயணன் (20) ஆகியோர் உரசுவதுபோல் சென்றனர். அதற்கு மெதுவாக செல்லுமாறு தங்கவேல் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து தங்கவேலை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தங்கவேல், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஸ்வரன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்