ஊட்டியில் துப்புரவு தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

ஊட்டியில் துப்புரவு தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-12 18:45 GMT

ஊட்டி

ஊட்டியில் துப்புரவு தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதல்

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 40). இவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தேவராஜ் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை, வீட்டிற்கு சென்றபோது தனது வீட்டின் கதவை தட்டிக் கொண்டு சத்தம் போட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் தேவராஜை அவர்கள் 3 பேரும் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

3 பேர் கைது

மேலும் கொலை மிரட்டல் எடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேவராஜ் இதுகுறித்து ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் இன்ஸ்பெக்டர் மீனா பிரியா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த கரண் உள்பட 3 பேரை கைது செய்தார். மேலும் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஊட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்