தியேட்டர் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது
நெல்லை மேலப்பாளையத்தில் தியேட்டர் ஊழியரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை ரெட்டியார்பட்டி முப்பிடாதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மர் மகன் இளையராஜா (வயது 38). இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த நாராயணன் மகன் ராஜ் (35), ஆறுமுகம் மகன் முப்பிடாதி (30) ஆகியோருடன் மேலப்பாளையத்தில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார். அப்போது அவர்களுக்கும், தியேட்டர் ஊழியரான மேலப்பாளையத்தை சேர்ந்த பீர்கசாலி மகன் அல்முசைதீக் (20) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதனால் ஆத்திரம் அடைந்த இளையராஜா உள்ளிட்டவர்கள் அல்முசைதீக்கை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அல்முசைதீக் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜா, ராஜ், முப்பிடாதி ஆகியோரை கைது செய்தனர்.