கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-18 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்ததாக பாகலூர் தேர்பேட்டை முகமது சல்மான் (வயது 25), பசவனப்பள்ளி மேச்சேரி (72), ஓசூர் நேரு நகர் உதயகுமார் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,650 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் மத்தூர் போலீசார் குட்கா விற்றதாக கூச்சனூரை சேர்ந்த தனசேகரன் (31) என்பவரை கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்