மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்திய 3 பேர் கைது
உவரியில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திசையன்விளை:
உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா மற்றும் போலீசார் நேற்று உவரி கடற்கரை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக குமாரபுரம் மேல தெருவை சேர்ந்த அல்பின் (வயது 19), பேய்குளம் செம்மன்குடியிருப்பைச் சேர்ந்த ஜெயசிங் (19), காரிகோவிலை சேர்ந்த முத்து சுந்தரேசன் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களது மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.