3 பேர் கைது

மண் திருடிய 3 பேர் கைது

Update: 2022-09-02 21:19 GMT

நெல்லை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உத்தமபாண்டியன்குளம் அருகே வேப்பங்குளத்தை சேர்ந்த பாபு (வயது 38), பணகுடி பகுதியை சேர்ந்த மார்ட்டின் ஜேம்ஸ் (38), களக்காடு வடகரையை சேர்ந்த கணேசன் (32) மற்றும் சிலர் உரிய அனுமதி சீட்டு இன்றி கரம்பை மண்ணை லாரிகளில் அள்ளிக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பாபு, மார்ட்டின் ஜேம்ஸ், கணேசன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 லாரிகள், 5 யூனிட் கரம்பை மண் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்