காரில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

ஊத்தங்கரையில் காரில் மதுபாட்டில்களை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-27 16:33 GMT

ஊத்தங்கரை

ஊத்தங்கரை போலீசார் காட்டேரியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது 300 மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் அனுமதீர்த்தத்தை சேர்ந்த சக்திவேல் (வயது34), சிவபாலன் (31) மற்றும் தர்மபுரி மாவட்டம் மாம்பட்டியை சேர்ந்த மணி (25) ஆகியோர் என்பதும், மதுபாட்டில்களை மாம்பட்டி கிராமத்திற்கு கடத்தி சென்றதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கார் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்