வாட்ஸ்அப் குழுவில் கருத்துகளை பதிவிட்டவா் உள்பட மேலும் 3 வாலிபர்கள் கைது

கனியாமூர் பள்ளி கலவர வழக்கு: வாட்ஸ்அப் குழுவில் கருத்துகளை பதிவிட்டவா் உள்பட மேலும் 3 வாலிபர்கள் கைது

Update: 2022-08-22 18:40 GMT

கள்ளக்குறிச்சி

சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கலவரம் சம்பந்தமான வீடியோ, புகைப்படம் ஆகியவற்றை ஆதாராமாக கொண்டு தொடர்புடைய நபர்களை கைது செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் வாட்ஸ்அப் குழுவில் வன்முறையை தூண்டும் கருத்துகளை பதிவு செய்து கலவரம் ஏற்பட காரணமாக இருந்ததோடு, கலவரத்தில் கலந்து கொண்ட கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா நல்லூர் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அசோக்குமார்(வயது 27), போலீஸ் வாகனம் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்திய சின்னசேலம் தாலுகா தென்செட்டியந்தல் கிராமத்தை சேர்ந்த பெத்துராஜ் மகன் ராம்குமார்(37), பள்ளி சொத்துகளை சேதப்படுத்தி, பொருட்களை எடுத்துச் சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் விஜய்ராஜ்(23) ஆகிய 3 பேரையும் சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்