சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கை விசாரித்து முடிக்க 3 மாதம் அவகாசம்

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் இன்னும் 8 சாட்சிகளை விசாரிக்க வேண்டி இருக்கிறது என சி.பி.ஐ. தெரிவித்ததால், அந்த வழக்கை முடிக்க கீழ்கோர்ட்டுக்கு 3 மாதம் அவகாசம் அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-06-30 19:16 GMT

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் இன்னும் 8 சாட்சிகளை விசாரிக்க வேண்டி இருக்கிறது என சி.பி.ஐ. தெரிவித்ததால், அந்த வழக்கை முடிக்க கீழ்கோர்ட்டுக்கு 3 மாதம் அவகாசம் அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இரட்டைக்கொலை வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் இன்னும் 8 சாட்சிகளை விசாரிக்க வேண்டி இருக்கிறது என சி.பி.ஐ. தெரிவித்ததால், அந்த வழக்கை முடிக்க கீழ்கோர்ட்டுக்கு 3 மாதம் அவகாசம் அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்களை கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு தந்தை-மகன் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்து இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுவதால் இந்த வழக்கு விசாரணையை முடிக்க ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில், மாவட்ட கோர்ட்டு அவகாசம் பெற்று இருந்தது. இந்த அவகாசத்தை மேலும் சில மாதங்கள் நீட்டித்து உத்தரவிடக்கோரி மதுரை மாவட்ட முதலாவது செசன்சு கோர்ட்டு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சி.பி.ஐ. தரப்பு வக்கீல் ஆஜராகி, 2 டாக்டர்கள், மாஜிஸ்திரேட்டு, சி.பி.சி.ஐ.டி. அதிகாரி, சி.பி.ஐ. அதிகாரிகள், தனிநபர்கள் என மொத்தம் 8 சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. இதற்கு இன்னும் 2 முதல் 3 மாதங்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார்.

3 மாதம் அவகாசம்

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கை விசாரிக்கும், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி நியமிக்கப்பட்ட நாளில் இருந்து 3 மாதத்தில் இந்த வழக்கு விசாரணையை முடிக்க அவகாசம் அளிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்