திருமணமான 3 மாதத்தில் பழவியாபாரி மர்ம சாவு

திண்டிவனத்தில் திருமணமான 3 மாதத்தில் பழவியாபாரி மர்மமான முறையில் இறந்தாா்.

Update: 2022-12-17 18:45 GMT

திண்டிவனம்:

திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அப்புகுமார்(வயது 28). இவர் திண்டிவனம் இந்திரா காந்தி பழைய பஸ் நிலையம் சாலையில் பழக்கடை வைத்திருந்தார். இவருக்கு கடந்த 3 மாதத்தில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் அவர் திடீரென மாயமானார். அவரை உறவினர்கள் தேடி வந்தனர். இந்த நிலையில் காவேரிப்பாக்கம் ஏரிக்கரை அருகில் உள்ள முள்தோப்பில் அப்புகுமார் தூக்கில் பிணமாக தொங்கினார். இது பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீசார் விரைந்து சென்று, மர்மமான முறையில் இறந்த அப்புகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்