பெண்ணிடம் 3½ பவுன் சங்கிலி பறிப்பு

மயிலாடுதுறையில் பெண்ணிடம் 3 ½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-04-30 18:45 GMT

மயிலாடுதுறையில் பெண்ணிடம் 3 ½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சங்கிலி பறிப்பு

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ஜெயகோபி. இவருடைய மனைவி இளவரசி (வயது 36). இவர் சீனிவாசபுரம் மெயின்ரோட்டில் உள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூமில் உதிரிபாகங்கள் விற்பனை பிரிவில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து இரவு 7 மணியளவில் தனது கணவர் வருகைக்காக சீனிவாசபுரம் ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் இளவரசி கழுத்தில் அணிந்திருந்த 3 ½ பவுன் செயினை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

மர்மநபருக்கு வலைவீச்சு

இதனால் அதிர்ச்சியடைந்த இளவரசி கூச்சலிட்டுள்ளார். அப்போது அங்கு இருந்தவர்கள் மர்ம நபரை விரட்டிச் சென்றுள்ளனர். ஆனால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக இளவரசி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்