கல்லூரி பேராசிரியரிடம் ரூ.3¼ லட்சம் திருட்டு
மதுரையில் கல்லூரி பேராசிரியரிடம் ரூ.3¼ லட்சம் திருட்டு நடந்தது.
மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பழனிக்குமார். உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், ஒத்தக்கடையில் உள்ள வங்கியில் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் எடுத்துவிட்டு, அந்த பகுதியில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். திரும்பி வந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.3¼ லட்சம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஒத்தக்கடை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.