ரூ.3¾ லட்சம் மோசடி
மூதாட்டியின் வைப்பு நிதியில் இருந்து ரூ.3¾ லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை அருகே உள்ள சிங்காரக்கோட்டையை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 75). இவர், வடமதுரையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் ரூ.5 லட்சத்தை வைப்பு நிதியாக செலுத்தினார். சமீபத்தில், அந்த தொகையை எடுப்பதற்காக ஈஸ்வரி வங்கிக்கு சென்றார். அப்போது அவர் செலுத்தியிருந்த வைப்பு தொகையில் இருந்து, ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தை மற்றொருவரின் வங்கி கணக்கில் மாற்றி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி, இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தனது பணத்தை மீட்டுத்தருமாறு குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.