3 லட்சத்து 93 ஆயிரத்து 123 பேருக்கு இலவச வேட்டி-சேலைகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 123 பேருக்கு இலவச வேட்டி-சேலைகள் வழங்கப்பட உள்ளன என கலெக்டர் மகாபாரதி கூறினார்.

Update: 2023-02-12 18:45 GMT


மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 123 பேருக்கு இலவச வேட்டி-சேலைகள் வழங்கப்பட உள்ளன என கலெக்டர் மகாபாரதி கூறினார்.

ஆய்வு

மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் சீனிவாசபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் இலவச வேட்டி-சேலை வழங்கும் பணியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவச வேட்டிகளை வழங்கினார்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 123 பேருக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட உள்ளன. குத்தாலம் தாலுக்காவில் 72,900 பேருக்கும், மயிலாடுதுறை வட்டத்தில் 94,664 பேருக்கும், சீர்காழி வட்டத்தில் 1,38,741 பேருக்கும், தரங்கம்பாடி வட்டத்தில் 86,818 பேருக்கும் என மொத்தம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 123 பேருக்கு இலவச வேட்டி- சேலைகள் வழங்கப்பட உள்ளன.

விரைவில் வழங்கப்படும்

இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,44,300 பேருக்கு சேலைகளும், வேட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்னும் சில தினங்களில் வேட்டி, சேலைகள் மிக விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மயிலாடுதுறை தாசில்தார் மகேந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்