மணல் லாரி மோதி 3 பேர் பலி

தாறுமாறாக ஓடிய மணல் லாரி மோதியதில் சாலையோரம் நின்றிருந்த 3 பேர் பலியானார்கள்.

Update: 2023-07-15 19:03 GMT

பனைக்குளம்,

தாறுமாறாக ஓடிய மணல் லாரி மோதியதில் சாலையோரம் நின்றிருந்த 3 பேர் பலியானார்கள்.

லாரி மோதி 3 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டு இருந்தது. அந்த லாரி தேவிபட்டினம் சத்திரம் பஸ் நிலையம் அருகே வந்த போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அந்த லாரி சாலையோரத்தில் நின்றிருந்த சிலர் மீது கண் இமைக்கும் நேரத்தில் மோதியது. இந்த விபத்தில் தேவிபட்டினம் மாதவனூரை சேர்ந்த ராமசாமி(வயது 55), காந்திநகரை சேர்ந்த உலகசுந்தரம்(68), சேதுபதி நகரை சேர்ந்த ஜெகநாதன்(55) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

போலீஸ் விசாரணை

விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் கிராம மக்கள், தேவிபட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய டிரைவரை தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்