ஓடும் ரெயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

ஓடும் ரெயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-12-03 17:35 GMT

ஜோலார்பேட்டை

ஓடும் ரெயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்கு வங்காளம் ஹவுராவிலிருந்து பெங்களூர செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆம்பூரை கடந்து வாணியம்பாடயை நோக்கி வந்து கொண்டிருந்தது. ரெயிலில் சேலம் உட்கோட்ட ரெயில்வே தனிப்படை போலீசார் சோதனை செய்து வந்தனர்.

சோதனையின்போது பொதுப்பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த தோல் பை இருநற்தது. அதனை சோதனை செய்ததில் 1 பண்டலில் 3 கிலோ கஞ்சா இருந்ததை பறிமுதல்செய்தனர்.

மேலும் பையை யார் கொண்டு வந்தது என்று தெரியாததால் பையை அதனை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்