3 கிலோ எடையில் உயிருடன் சிக்கிய கல்நண்டு

கோடியக்கரை மீனவர் வலையில் 3 கிலோ எடையில் உயிருடன் சிக்கிய கல்நண்டு சிக்கியது.

Update: 2023-01-11 18:45 GMT

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த மீன்பிடி சீசன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன் பிடித்து வருகின்றனர். இங்கு நாள்தோறும் 2 டன் முதல் 5 டன் வரை 40 வகையான மீன்களும், 5 வகையான இறால், 10 வகையான நண்டுகள் பிடிக்கப்பட்டு கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கோடியக்கரை மீனவர் வலையில் 3 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய கல் நண்டு சிக்கியது. அந்த நண்டை எடுத்துபார்த்த போது அது உயிருடன் இருந்தது. மேலும் அதன் வயிற்றில் ஏராளமான முட்டைகள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக மீனவர்கள் அந்த நண்டை பிளாஸ்டிக் பெட்டியில் தண்ணீரை நிரப்பி வென்டிலேட்டர் பொருத்தி உயிருடன் சீர்காழி அருகே தொடுவாயில் உள்ள ராஜீவ்காந்தி மீன் குஞ்சு பொரிப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு நண்டு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது ஒரு வாரத்தில் நண்டு குஞ்சுகள் பொரித்தவுடன் மீண்டும் கடலில் விடப்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்