திருச்சியில் 3½ கிலோ கஞ்சா பறிமுதல் - 5 பேர் கைது
திருச்சியில் 3½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி காராளம்மன் கோவில் அருகே கஞ்சா விற்றதாக திருச்சி உறையூர் கீழக்கல்நாயக்கன் தெருவை சேர்ந்த அப்பாஸ் என்ற பாலகுமார்(வயது 26) என்பவரை உறையூர் போலீசார் கைது செய்தனர். இதேபோல், திருச்சி உறையூர் ராமலிங்கநகர் பூங்கா அருகே கஞ்சா விற்றதாக உறையூர் விவேகானந்தர் நகர் பகுதியை சோ்ந்த மணிகண்டன்(21), திருச்சி உறையூர் பெரியார் மாளிகை அருகே கஞ்சா விற்றதாக திருச்சி புதுக்கோட்டை ரோடு ஆர்.ஆர்.நகர் பகுதியை சோ்ந்த நாகேந்திர பிரசாத்(22), திருச்சி சத்திரம் பஸ்நிலைத்தில் உள்ள ஒரு பேக்கரி கடை முன்பு கஞ்சா விற்றதாக உறையூர் தெற்கு பங்காளி தெரு பகுதியை சேர்ந்த அபுதாகீர்(26), , திருச்சி ஷோபீஸ் கார்னர் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டான்டு அருகே கஞ்சா விற்றதாக திருச்சி இ.பி.ரோடு சத்யமூர்த்தி நகர் பகுதியை சோ்ந்த நிம்ரோஸ் ராஜன்(39) ஆகியோர் அந்தந்த பகுதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.