கொரோனா தொற்றால் 3 பேர் பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 75 ஆயிரத்து 952 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 896 பேர் பலியான நிலையில், 74 ஆயிரத்து 999 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று வெளியான உமிழ்நீர் பரிசோதனை முடிவில் புதிதாக 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அதாவது சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிவக்கம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த என்.எல்.சி. பகுதியை சேர்ந்த 2 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் கொரோனாவில் இருந்து 3 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாவட்டத்தில் 57 பேர் கொரோனாவுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.