வெள்ளகோவில் மற்றும் பொங்கலூரில் 3 வீடுகளில் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் நகைகள் மற்றும் பணத்ைத திருடிச்ெசன்றனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை-பணம் திருட்டு
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி தர்மராஜ். இவருடைய மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் 2 பேரையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். தர்மராஜ் மட்டும் தனியாக ஓலப்பாளையத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி காங்கயம் அருகே கவுண்டம்பாளையத்தில் உள்ள மகள் வீட்டிற்கு தர்மராஜ் சென்று விட்டார். இதனால் வீட்டில் யாரும் இல்லை.
நேற்று காலை தர்மராஜின் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர் தர்மராஜுக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து தர்மராஜ் நேரில் வந்து பார்த்த போது வீட்டில் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நெக்லஸ், சங்கிலி, தோடு என மொத்தம் 6¾ பவுன் நகைகள், வெள்ளி காமாட்சி விளக்கு-4, வெள்ளி குங்குமச்சிமிழ்-2, ரூ.49 ஆயிரம் ெராக்கம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து தர்மராஜ் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மற்றொரு வீட்டின் பூட்டு உடைப்பு
இதேபோல் தர்மராஜ் வீட்டிற்கு அருகே வசிப்பவர் ஜெகதீஸ்வரன் (55). இவர் கோவில் பூஜை செய்து வருகிறார். இவர் தனியாக தான் வசித்து வந்துள்ளார். இவர் 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.
நேற்று காலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர், ஜெகதீஸ்வரனுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார். இவரது வீட்டில் ஏதேனும் திருட்டு போய் உள்ளதா? என்று தெரியவில்லை. ஜெகதீஸ்வரன் சென்னையில் இருந்து வந்த பிறகு தான் அவரது வீட்டில் திருட்டு போனதா? என்ற விவரங்கள் தெரிய வரும்.
இந்த 2 திருட்டு சம்பவங்கள் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொங்கலூர்
இதேபோல் பொங்கலூர் ஏ.எல்.ஆர்.நகரை சேர்ந்தவர் கவுதம். இவர் நேற்று முன்தினம் உடல்நலம் சரியில்லாததால் மருத்துவ பரிசோதனைக்காக கோவைக்கு சென்றுள்ளார். இவருடன் இவரது தாயார் விஜயலட்சுமி உடன் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்றுகாலை வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக அருகில் இருந்தவர்கள் கவுதமிடம் போன் செய்து தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 4 பவுன் நெக்லஸ் மற்றும் 1½ பவுன் கொண்ட 3 மோதிரங்கள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.
பணம்,நகையை திருடிய மர்ம ஆசாமிகள் சோபாவின் மேல் ரூ.13 ஆயிரத்தை மட்டும் போட்டுவிட்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கவுதம் அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விசாரணை மேற்கொண்டார். மேலும் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு மர்மஆசாமிகளின் ைகரேகைகளை பதிவு செய்தனர்.