இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேர் கைது
கோவையில் இறைச்சி கடையை சேதப்படுத்திய இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
துடியலூர்,
கோவை மாவட்டம் பிரஸ்காலனி பி.எஸ்.ஜி. கார்டன் பகுதியை சேர்ந்தவர் சிக்கந்தர் (வயது 32). இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள இந்திரா காந்தி வணிக வளாகத்தில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு வந்த 3 பேர் கடையின் ஷட்டரை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்டனர். இது குறித்து சிக்கந்தர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அதில் கடையை சேதப்படுத்தியது பெரியநாயக்கன்பாளையம் இந்து முன்னணி பொதுச் செயலாளர் சண்முகம் (40), ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் வினோத் (22), இந்து முன்னணி ஒன்றிய தலைவர் முருகன் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்தனர்.