மேய்ச்சலுக்கு சென்ற 3 ஆடுகள் திடீர் சாவு

தூத்துக்குடியில் மேய்ச்சலுக்கு சென்ற 3 ஆடுகள் திடீரென்று இறந்தன.

Update: 2023-02-04 18:45 GMT

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள துப்பாஸ்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 56). விவசாயியான இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் தனது ஆடுகளை வெள்ளப்பட்டி, தாளமுத்து நகர், தருவைகுளம் உள்ளிட்ட இடங்களில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அதேபோல் நேற்று வெள்ளைச்சாமி மேய்ச்சலுக்கு தனது ஆடுகளை ஓட்டிச் சென்றாா். அப்போது திடீரென 3 ஆடுகள் வாயில் நுரை தள்ளியபடி கீழே விழுந்து இறந்தது.

இதுகுறித்து வெள்ளைச்சாமி தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்