அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட சாத்தமங்கலத்தை அடுத்துள்ள புதூர் பகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராஜகுமாரிக்கு சொந்தமான ஆடுகள் வயலில் மேய்ந்துள்ளன. அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் 3 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன.