வெறிநாய் கடித்து 3 ஆடுகள் சாவு

முதுகுளத்தூர் அருகே வெறிநாய் கடித்து 3 ஆடுகள் பலியானது.

Update: 2022-09-19 18:33 GMT

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் கீழரத வீதியை சேர்ந்தவர் வடிவேலு (வயது 40). இவர் தனது வீட்டு ஆட்டு கொட்டகையில் 10 ஆடுகள் வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் ஆள் இல்லாத சமயத்தில் வெறி நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்ததில் 3 பெரிய ஆடுகள் இறந்தன. மேலும் 4 ஆட்டுக்குட்டிகளையும் நாய்கள் தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வெறி நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்