கனமழை காரணமாக 3 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின

ஆம்பூர் பகுதியில் கனமழை காரணமாக பாலாற்றில் உள்ள 3 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2022-12-15 12:33 GMT

ஆம்பூர் பகுதியில் கனமழை காரணமாக பாலாற்றில் உள்ள 3 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தரைப்பாலங்கள் மூழ்கின

தமிழகம் மற்றும் ஆந்திரா எல்லையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக ஆம்பூர் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் பச்சகுப்பம் பகுதியிலிருந்து குடியாத்தம் மற்றும் நரியம்பட்டு பகுதிகளை இணைக்கும் தரைப்பாலம், ஆம்பூர் பஜார் பகுதியில் இருந்து துத்திப்பட்டு மற்றும் தேவாலபுரம் பகுதியை இணைக்கும் தரைபாலம், ஆம்பூரில் இருந்து நரியம்பட்டு பகுதியை இணைக்கும் தரைப்பாலம் ஆகிய 3 பாலத்தின் மீது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பொதுமக்கள் அவதி

தரைப்பாலத்தில் ெவள்ளம் ஓடுவதால் பொதுமக்கள் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு செல்ல அவதிப்பட்டு வருகின்றனர். ஆபத்தை உணராமல் பொதுமக்கள் சிலரும் மற்றும் சில வாகன ஓட்டிகளும் தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம் வழியாக சென்று வருகின்றனர். இது குறித்து தகவலறிந்ததும் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, ஆம்பூர் தாசில்தார் மகாலட்சுமி ஆகியோர் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

தரைப்பாலத்தில் இருபுறமும் முன்னெச்சரிக்க நடவடிக்கையாக போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்