20 மணி நேரம் நடுக்கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு
படகு என்ஜினில் டீசல் தீர்ந்ததால் 20 மணி நேரம் நடுக்கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
வேதாரண்யம்:
படகு என்ஜினில் டீசல் தீர்ந்ததால் 20 மணி நேரம் நடுக்கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
கரை திரும்பவில்லை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் வேதையன். இவருக்கு சொந்தமான படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த பரமசிவம், பன்னீர் ஆகிய 3 மீனவர்களும் கடந்த 11-ந் தேதி மதியம் பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்பிடித்து கொண்டு நேற்று முன்தினம் காலையில் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரை திரும்பவில்லை.
கடலில் தத்தளித்த மீனவர்கள்
மீனவர்கள் கரை திரும்பாததால் அவர்களது குடும்பத்தினர் கவலை அடைந்தனர். இதை தொடர்ந்து சக மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை 10-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று மாயமான மீனவர்களை தேடினர்.
இந்த நிலையில் படகில் என்ஜினில் டீசல் தீர்ந்ததால் 3 மீனவர்களும் கடலில் 20 மணி நேரம் தத்தளித்து கொண்டிருந்துள்ளனர்.
மீட்பு
இதை பார்த்த சக மீனவர்கள், நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 3 மீனவர்களையும், அவர்களது படகையும் மீட்டு ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு கொண்டு வந்தனர். 3 மீனவர்களையும் பார்த்ததும் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
மீனவர்கள் மீட்கப்பட்டதால் மீனவ குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.